புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை


புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை
x

புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை

கன்னியாகுமரி

அழகியபாண்டியபுரம்:

பூதப்பாண்டி சுடுகாட்டில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

புதுமாப்பிள்ளை பிணம்

குமரி மாவட்டம் பூதப்பாண்டி மேல ரதவீதியை சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவருடைய மகன் வினிஷ் (வயது 30). இவர் அந்த பகுதியில் கேபிள் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் சமீபத்தில் அவருக்கு திருமண ஏற்பாடு நடந்தது. அவருடைய உறவினர் பெண்ணை மணமுடிக்க நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. மேலும் திருமண தேதியும் முடிவு செய்யப்பட்டு இருவீட்டார் முன்னிலையில் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே வினிஷ் அந்த பகுதியில் உள்ள ஒரு சுடுகாட்டில் விஷம் குடித்த நிலையில் பிணமாக கிடப்பதாக பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

கொலை வழக்கு

உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்து கொண்ட வினிஷ் மீது கடந்த 2013-ம் ஆண்டு நடந்த ஒரு கொலை தொடர்பாக வழக்கு உள்ளது. இதுதொடர்பாக வழக்கில் ஜாமீனில் இருந்து வந்தார்.

இதற்கிடையே இந்த வழக்கில் சாட்சியை கலைக்க முயன்றதாகவும் இவர் மீது போலீசில் வழக்குப்பதிவானது. இந்த வழக்கிலும் அவருக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்தது.

காரணம் என்ன?

ஆனால் அவர் தினமும் திருநெல்வேலிக்கு சென்று அங்குள்ள போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். இதுபோன்ற காரணத்தால் அவர் மனஉளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. எனவே வாழ்க்கையில் வெறுப்படைந்து அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து புதுமாப்பிள்ளை தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story