புதிய வகுப்பறைகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா


புதிய வகுப்பறைகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா
x

கருப்பம்புலம் ஊராட்சியில் அரசு பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா கருப்பம்புலம் ஊராட்சியில் தெற்கு காட்டில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கு புதிதாக 2 வகுப்பறைகள் கட்ட ரூ.26 லட்சம் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தொடர்ந்து வகுப்பறைகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க இயக்குனரும், தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளருமான உதயம் முருகையன் பள்ளி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதில் பள்ளி தலைமை ஆசிரியை கவுரியம்மாள், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ராஜு, பாஸ்கரன், ஒன்றிய பொறியாளர்கள் அருள்ராஜ், மணிமாறன், வட்டார கல்வி அலுவலர் ராஜமாணிக்கம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முருகையன், சுசீலா, கணேசன் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் ஆசிரியர்கள், கிராமமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story