கூட்டு குடிநீர் திட்ட மறுசீரமைப்பு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா


கூட்டு குடிநீர் திட்ட மறுசீரமைப்பு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா
x

கூட்டு குடிநீர் திட்ட மறுசீரமைப்பு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் மற்றும் குன்னம் தாலுகாவில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்திடும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதியுதவியுடன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்படும் கூட்டு குடிநீர் திட்ட மறுசீரமைப்பு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த மேல உசேன் நகரம், கூத்தூர், கொட்டரை, கோட்டைகாடு, ஆதனூர், மதுராகுடிகாடு ஆகிய கிராமங்களில் உள்ள 8,664 பேர் பயன் பெறும் வகையிலும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒதியம், கரம்பியம், பெரியம்மாபாளையம், மூங்கில் பாடி மற்றும் லட்சுமிபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 7,111 பேர் பயன் பெறும் வகையில் தலா ரூ.1.28 கோடி வீதம் ரூ.2.56 கோடி மதிப்பிலான கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு வேப்பூர் ஒன்றியத்தில் தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 2 ஆழ்துளை கிணறுகளுடன், புதிதாக 150 மி.மீ. விட்டமுள்ள புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட உள்ளன. அதேபோல் ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ள 2 ஆழ்துளைக் கிணறுகள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த குடிநீர் திட்டப்பணிகள் 6 மாத காலத்திற்குள் முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு சீராக பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story