புதிய பாலம் கட்ட அடிக்கல் நாட்டு விழா


புதிய பாலம் கட்ட அடிக்கல் நாட்டு விழா
x

சங்கரன்பந்தலில் புதிய பாலம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நிவேதா முருகன் எம்.எல்.ஏ. பங்கேற்பு

மயிலாடுதுறை

பொறையாறு:

பொறையாறு அருகே சங்கரன்பந்தல் கிராமத்தில் இலுப்பூர்-உத்தரங்குடி ஆகிய ஊராட்சிகளை இணைக்கும் வீரசோழன் ஆற்றின் குறுக்கே இருந்த பழமையான பாலம் வழுவிழந்து இருந்தது. மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த பாலத்தை இடித்து அகற்றி விட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என ெபாதுமக்கள் கோரிக்ை விடுத்தனர். இதை தொடர்ந்து நபார்டு வங்கி நிதியுதவியில் ரூ.2.கோடியே 3.லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதை தொடர்ந்து புதிய பாலம் கட்ட அடிக்கல் நாட்டுவிழா சங்கரன்பந்தலில் நடைபெற்றது. விழாவிற்குமாவட்ட தி.மு.க.செயலாளர், நிவேதா முருகன், எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார். விழாவில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர்கள் அப்துல்மாலிக், அமுர்தவிஜயகுமார், அன்பழகன், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், மாநில புதிய பயிர் ரக வெளியீட்டுக்குழு உறுப்பினர் குருகோபிகணேசன், மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம பொதுமக்கள். கிராம பஞ்சாயத்தார்கள் முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story