புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா
சங்கனாங்குளம் ஊராட்சி மன்ற புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது
திருநெல்வேலி
இட்டமொழி:
நாங்குநேரி யூனியன் சங்கனாங்குளம் ஊராட்சிமன்ற அலுவலக புதிய கட்டிடம், நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய நிதியில் இருந்து ரூ.28 லட்சம் ஒதுக்கப்பட்டு, நேற்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு சங்கனாங்குளம் பஞ்சாயத்து தலைவர் எஸ்.சின்னதம்பி தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் மன்னார்புரம் அகஸ்டின் கீதராஜ் முன்னிலை வகித்தார். தி.மு.க. நாங்குநேரி ஒன்றிய செயலாளர்கள் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு, எஸ்.ஆரோக்கிய எட்வின் ஆகியோர் அடிக்கல் நாட்டினார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி, கட்சி நிர்வாகிகள் எஸ்.கே.ஆறுமுகம், அருணாச்சலம், கொம்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் நம்பி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story