பள்ளிக்கூடத்தில் புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா
பாவூர்சத்திரம் அருகே பள்ளிக்கூடத்தில் புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
தென்காசி
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூர் பஞ்சாயத்து கொண்டலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய வகுப்பறைகள் கட்ட, எஸ்.பழனிநாடார் எம்.எல்.ஏ ரூ.18.75லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. யூனியன் தலைவி காவேரி தலைமை தாங்கினார். எஸ்.பழனிநாடார் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி கட்டிடப் பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர் குத்தாலிங்கராஜா என்ற கோபி, மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர்கள் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story