தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி திறப்பு


தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி திறப்பு
x
தினத்தந்தி 8 Nov 2022 12:15 AM IST (Updated: 8 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சேர்வைக்காரன்பட்டி பஞ்சாயத்தில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா நடந்தது.

தென்காசி

கடையம்:

கடையம் யூனியன் சேர்வைக்காரன்பட்டி பஞ்சாயத்தில் ஊராட்சி பொது நிதியில் கட்டிய புதிய தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி நேற்று மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இதில் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கி திறந்து வைத்தார். பஞ்சாயத்து தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் பஞ்சாயத்து துணைத் தலைவர் ராசம்மாள் லட்சுமணன், கவுன்சிலர் ரம்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு உறுப்பினர்கள் சந்தன ரோஜா, திவ்யா, புஷ்பம், பரமேஸ்வரி, கண்ணன், முத்துராஜா தங்கராஜ் மற்றும் கிளைச் செயலாளர் பொன்னுத்துரை, செல்வராஜ், ராஜேந்திரன், சாமுவேல், ஆதிசெல்வன் உட்பட பலர் கலந்துகொண்டனர். பஞ்சாயத்து செயலாளர் கதிரேசன் நன்றி கூறினார்.


Next Story