ரூ.8 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்


ரூ.8 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்
x

ரூ.8 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

திருப்பூர்

சேவூர்

சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரம் தோறும் நிலக்கடலை ஏலம் நடைபெற்றுவருகிறது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில், 200 மூட்டைகள் நிலக்கடலை விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இதில் குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.7,350 முதல் ரூ.7,550 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.7,080 முதல் ரூ.7,190 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.6,800 முதல் ரூ.6,950 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.8 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது. இதில் 6 வியாபாரிகள், 30 விவசாயிகள் பங்கேற்றனர்.

----


Related Tags :
Next Story