பலத்த மழையால் வேர்க்கடலை விவசாயிகள் மகிழ்ச்சி


பலத்த  மழையால் வேர்க்கடலை விவசாயிகள் மகிழ்ச்சி
x

வள்ளிமலை பகுதியில் பெய்த பலத்த மழையால் வேர்க்கடலை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

ராணிப்பேட்டை

வள்ளிமலை பகுதியில் பெய்த பலத்த மழையால் வேர்க்கடலை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

வள்ளிமலை பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெப்பத்தால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். குறிப்பாக விவசாயிகள் வேர்க்கடலை பயிரிட்டு மழை இல்லாமல் பயிர் காய்ந்து போகும் நிலையில் உள்ள கவலையுடன் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை இடி, மின்னலுடன் பலத்த பெய்தது. மழையினால் வேர்க்கடலை மற்றும் கரும்பு. கத்தரி வெண்டை விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தாழ்வாக உள்ள விவசாய நிலங்களில் நேற்று மாலை பெய்த மழையினால் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது அத்துடன் சாலை ஓரங்களிலும் மழைநீர் தேங்கியது.

இந்த மழையினால் பொன்னை. வள்ளிமலை. மேல்பாடி பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அவ்வப்போது மின்சாரம் தடை பட்டிருந்தது. சில இடங்களில் அறுவடைக்கு நெற்பயிர்கள் தயாராக இருந்த வயல்களில் தண்ணீர் தேங்கியது விவசாயிகளை வேதனையடைய செய்துள்ளது.


Next Story