அரசு வேளாண் ஒழுங்குமுறை கூடத்தில் நிலக்கடலை ரூ.16 லட்சத்துக்கு விற்பனை


அரசு வேளாண் ஒழுங்குமுறை கூடத்தில் நிலக்கடலை ரூ.16 லட்சத்துக்கு விற்பனை
x

அரசு வேளாண் ஒழுங்குமுறை கூடத்தில் நிலக்கடலை ரூ.16 லட்சத்துக்கு விற்பனையானது.

கரூர்

நொய்யல் அருகே சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், க.பரமத்தி ஒன்றியம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் நிலக்கடலை 229.90 குவிண்டால் எடை கொண்ட 717-மூட்டை நிலக்கடலை விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.78.80-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.64.19-க்கும், சராசரி விலையாக ரூ.76.50-க்கும் என மொத்தம் ரூ.16 லட்சத்து 7 ஆயிரத்து 665-க்கு விற்பனையானது.


Next Story