நிலத்தடி நீர் மேலாண்மை பயிற்சி
மானூரில் நிலத்தடி நீர் மேலாண்மை குறித்து பயிற்சி நடைபெற்றது.
மானூர்:
மானூர் யூனியன் அலுவலக கூட்ட அரங்கில் வைத்து, இந்திய அரசு நீர் சக்தி அமைச்சகத்தின் சார்பில், நிலத்தடி நீர் மேலாண்மை மற்றும் பொதுமக்களின் பங்கேற்பு குறித்த மூன்றாம் நிலை பயிற்சி நடைபெற்றது. மானூர் யூனியன் தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன் தலைமை தாங்கினார். மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் சென்னை அலுவலக விஞ்ஞானிகள் ராஜ்குமார், பத்மாவதி, சக்திமுருகன் மற்றும் சத்யராஜ் பாட்சா ஆகியோர் கலந்து கொண்டு, நிலத்தடி நீரின் முக்கியத்துவம், இன்றையநிலை, தன்மைகள்மாற்றம் மற்றும் நீர் சேமிப்பின் வழிமுறைகள் குறித்து விளக்கி கூறினர். தொடர்ந்து, மழை நீரை சேமிப்பதால் நிகழும் வேதியியல் மாற்றங்கள், சுற்றுச்சூழல் மாற்றங்கள், செயற்கை செறியூட்டும் தன்மை போன்றவை குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினர். இவை குறித்த புத்தகங்கள் வழங்கப்பட்டு பயிற்சி வகுப்பும் நடந்தது. பயிற்சியில் திரைப்படத்தொகுப்பு மூலம் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
இதில் மானூர் யூனியன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அலெக்ஸ், யூனியன் கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், மானூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.