10 லட்சம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி குரூப் 2 - தேர்வு முடிவுகள் வெளியீடு...!


10 லட்சம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி குரூப் 2 - தேர்வு முடிவுகள் வெளியீடு...!
x

குரூப் -2 குரூப்-2 ஏ பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.

சென்னை,

தமிழக அரசின் அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக இருந்த 5,413 பணியிடங்களுக்கான குரூப் -2 குரூப்-2 ஏ முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 21ஆம் தேதி நடைபெற்ற தேர்வுக்கான முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. http://tnpsc.gov.in என்ற இணையத்தளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

குரூப் -2 முதன்மைத்தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 25-ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 21-ம் தேதி நடைபெற்ற குரூப் -2 குரூப்-2 ஏ முதல்நிலை தேர்வை சுமார்

10 லட்சம் பேர் எழுதிய இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story