கடலூர் மாவட்டத்தில், நாளை டி.என்.பி.எஸ்.சி.குரூப்-4 தேர்வை 99,437 பேர் எழுதுகின்றனர்


கடலூர் மாவட்டத்தில், நாளை    டி.என்.பி.எஸ்.சி.குரூப்-4 தேர்வை 99,437 பேர் எழுதுகின்றனர்
x

கடலூர் மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 99 ஆயிரத்து 437 பேர் எழுதுகின்றனர்.

கடலூர்


குரூப்-4 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-4 தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் நடக்கிறது. இந்த தேர்வை கடலூர் மாவட்டத்தில் 99 ஆயிரத்து 437 பேர் எழுத உள்ளனர். இதற்காக 259 இடங்களில் 334 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த தேர்வுக்காக வினாத்தாளை பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்வதற்கும், தேர்வு முடிந்ததும் விடைத்தாள்களை கொண்டு வருவதற்கும் 54 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இது தவிர தேர்வு மையங்களை கண்காணிக்க 31 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. துணை கலெக்டர் நிலையில் உள்ள இந்த பறக்கும் படையினர் தலா 12 அல்லது 13 தேர்வு மையங்களுக்குள் சென்று சோதனையிடுவார்கள்.

அடிப்படை வசதி

தேர்வு காலை 10 மணி முதல் மதியம் வரை 1 மணி நடக்கிறது. தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தேர்வுஎழுத வரும் மாணவர்களுக்காக சிறப்பு பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story