சென்னையில் நடைபெறும்ஜி.எஸ்.டி. கருத்து கேட்பு கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்வணிகர்களுக்கு விக்கிரம ராஜா அறிவுறுத்தல்
சென்னையில் நடைபெறும் ஜி.எஸ்.டி. கருத்து கேட்பு கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று வணிகர்களுக்கு விக்கிரம ராஜா அறிவுறுத்தினாா்.
தமிழ்நாடு வணிகர்கள் சங்கத்தின் பேரமைப்பு சார்பில் விழுப்புரத்தில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு பேரமைப்பு மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் சண்முகம், மாவட்ட செயலாளர் யாசின் மவுலானா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரம ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் சென்னையில் நடைபெற இருக்கும் ஜி.எஸ்.டி. கூட்டம் குறித்த கருத்து கேட்பு கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்த வேண்டும், விலைவாசி உயர்வு குறித்தும் சம்பந்த பட்ட துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்று கூறினார். முன்னதாக புதிதாக தேர்தெடுக்கபட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை அறிமுக படுத்தினார். கூட்டத்தில் மாநில துணைத்தலைவர்கள் பிரகாஷ், பிரேம்நாத், மாநில இணை செயலாளர் கலைமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.