உணவு தானியங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை தவிர்க்க வேண்டும்


உணவு தானியங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை தவிர்க்க வேண்டும்
x

உணவு தானியங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு தவிர்க்கப்பட வேண்டும் என உணவு தானிய வணிக வட்டாரத்தினர் மத்திய அரசுக்கு வலியுறுத்தி உள்ளனர்.

விருதுநகர்

உணவு தானியங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு தவிர்க்கப்பட வேண்டும் என உணவு தானிய வணிக வட்டாரத்தினர் மத்திய அரசுக்கு வலியுறுத்தி உள்ளனர்.

வரிவிதிப்பு

நடந்து முடிந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பேக்கிங் செய்யப்பட்ட உளுந்தம் பருப்பு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு போன்ற உணவு தானிய வகைகளுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் 25 கிலோவுக்கு மேல் பேக்கிங் செய்யப்பட்டிருந்தால் அதற்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு இல்லை என்றும், 25 கிலோவுக்கு குறைவாக உள்ள பேக்கிங் செய்யப்பட்ட உணவு தானியங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து உளுந்து, துவரை உள்ளிட்ட உணவு தானிய மொத்த வணிகர் ஆனந்தம் கூறியதாவது:-

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையானது சாமானிய மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும். 5 சதவீத வரி விதிப்பு என்பது கிலோவுக்கு ரூ. 5 விலை உயர வாய்ப்புள்ளது. உணவு தானியங்கள் பேக்கிங் செய்யப்பட்டுள்ளதன் நோக்கமே தரமான பொருளை, சரியான எடையுடன் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக தான்.

குழப்பம்

அவ்வாறு இருக்கையில் பேக்கிங் செய்யப்பட்ட உணவு தானியங்களுக்கு வரி விதிப்பது என்பது ஏற்புடையதல்ல. அதிலும் 25 கிலோவுக்கு மேல் பேக்கிங் செய்யப்பட்டிருந்தால் அதற்கு வரி விதிப்பு கிடையாது என்றும், அதற்கு குறைவான பேக்கிங் செய்யப்பட்ட உணவு தானியத்திற்கு வரி விதிப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த பாரபட்சம் ஏன்? என்பது தெரியவில்லை.

இது குழப்பத்தை ஏற்படுத்தும். மேலும் வரி விதிப்பு முறையில் ஆய்வு செய்வோரிடையே முறைகேடுகள் நடக்கவும் வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எனவே மத்திய அரசு சாமானிய மக்களையும் பாதிக்கக்கூடிய பேக்கிங் செய்யப்பட்ட உணவு தானியங்களுக்கான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை முற்றிலுமாக தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உணவு தானிய வணிக வட்டாரத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story