வாகனம் மோதி காவலாளி பலி


வாகனம் மோதி காவலாளி பலி
x

ஓசூரில் வாகனம் மோதி காவலாளி இறந்தார்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சாமண்டஅள்ளியை சேர்ந்தவர் பழனி (வயது 68). இவர் ஓசூரில் உள்ள காந்தி நகரில் தங்கி தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் பழனி கிருஷ்ணகிரி- ஓசூர் தேசிய நெடுஞ்சாலை பேரண்டப்பள்ளி ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது அந்த வழியாக சென்ற வாகனம் மோதி பலியானார். இந்த விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

=======

1 More update

Next Story