மோட்டார் சைக்கிள் மோதி காவலாளி பலி
சாலையை கடக்க முயன்றபோது, மோட்டார் சைக்கிள் மோதி காவலாளி பரிதாபமாக இறந்தார்.
சாலையை கடக்க முயன்றபோது, மோட்டார் சைக்கிள் மோதி காவலாளி பரிதாபமாக இறந்தார்.
காவலாளி
சமயபுரம் அருகே உள்ள நரசிங்கமங்கலத்தை சேர்ந்தவர் ராமானுஜம் (வயது 50), இவர் நெ.1 டோல்கேட் அருகே பழூரில் இயங்கி வரும் ஓட்டலில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் பஸ்சில் பணிக்கு வந்த ராமானுஜம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பழூர் நிறுத்தத்தில் இறங்கி சாலையை கடக்க முயன்றார்.
அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஜெயராமன் மகன் விவேக் (28) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ராமானுஜத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் ராமானுஜம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.
சாவு
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.