கூடலூர் ரைசிங் ஸ்டார் அணி வெற்றி


கூடலூர் ரைசிங் ஸ்டார் அணி வெற்றி
x
தினத்தந்தி 10 July 2023 2:00 AM IST (Updated: 10 July 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட அளவிலான கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் கூடலூர் ரைசிங் ஸ்டார் அணி வெற்றி பெற்றது.

நீலகிரி

கோத்தகிரி

நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டு ஊட்டி, கோத்தகிரியில் நடந்து வருகிறது. இதில் சங்கத்தில் ஏ, பி மற்றும் சி டிவிஷன் பிரிவில் பதிவு செய்துள்ள 21 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. நேற்று கோத்தகிரி காந்தி மைதானத்தில் முதல் அரையிறுதி போட்டி நடைபெற்றது. இதில் கூடலூர் ஆரஞ்சு அணியும், கூடலூர் ரைசிங் ஸ்டார் அணியும் மோதியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ரைசிங் ஸ்டார் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது. இந்த அணி வீரர்கள் மோகன்ராஜ் 62 ரன்கள், வைசாக் 39 ரன்கள், ஜூபின் 37 ரன்கள் எடுத்தனர். கூடலூர் ஆரஞ்சு அணியின் பந்து வீச்சாளர் ரோஷன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 120 பந்துகளில் 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கூடலூர் ஆரஞ்சு அணி 15.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த அணி வீரர்கள் ஆனந்தராஜ் 34 ரன்கள், சந்தோஷ் 27 ரன்கள் எடுத்தனர். ரைசிங் அணியின் பந்து வீச்சாளர் வினீத் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் கூடலூர் ரைசிங் ஸ்டார் அணி வெற்றி பெற்றதுடன், இறுதி போட்டிக்குள் நுழைந்தது.


Next Story