மத்திய தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் குறித்து வழிகாட்டும் நிகழ்ச்சி


மத்திய தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் குறித்து வழிகாட்டும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 10 Aug 2023 12:15 AM IST (Updated: 10 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மத்திய தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் குறித்து வழிகாட்டும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது என்று கலெக்டர் மகாபாரதி கூறினார்.

மயிலாடுதுறை


மத்திய தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் குறித்து வழிகாட்டும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது என்று கலெக்டர் மகாபாரதி கூறினார்.

மத்திய தேர்வாணையம்

மத்திய தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் குறித்து வழிகாட்டும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது என்று கலெக்டர் மகாபாரதி தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in என்ற இணையதளத்தில் ஜூனியர் என்ஜினீயர் மற்றும் ஸ்டெனோகிராபர் காலி பணியிடங்களை எழுத்துத்தேர்வு மற்றும் திறன் தேர்வு வாயிலாக நிரப்புவதற்கான விளம்பர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி 1324 ஜூனியர் என்ஜினீயர் காலிப்பணியிடத்துக்கு விண்ணப்பிக்க வருகிற 16-ந்தேதி கடைசி நாளாகும். இப்பணிக்கு 30 வயதிற்கு உட்பட்ட தொழில்நுட்ப கல்வி, என்ஜினீயரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். அதேபோல் 1207 ஸ்டெனோகிராபர் காலிப்பணியிடத்துக்கு விண்ணப்பிக்க வருகிற 23-ந்தேதி கடைசி நாளாகும்.

வழிகாட்டும் நிகழ்ச்சி

இப்பணிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட 2 தேர்வுகள் குறித்த இதர விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விளம்பர அறிவிப்பை பார்த்து பயனடையவும். இந்த தேர்வுகள் குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 94990 55904 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு தகவல் அனுப்பி முன்பதிவு செய்துகொள்வதோடு, நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று நேரில் கலந்துகொண்டு வழிகாட்டுதல் பெற்று தேர்வில் தேர்ச்சி அடைந்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story