சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்களுக்கான வழிகாட்டுதல் கருத்தரங்கம்


சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்களுக்கான வழிகாட்டுதல் கருத்தரங்கம்
x

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்களுக்கான வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூரில் ஜெயராம் ஐ.ஏ.எஸ். அகாடமி சார்பில் சிவில் சர்வீஸ், டி.என்.பி.எஸ்.சி. மத்திய அரசு தேர்வாணைய தேர்வுகள், வங்கித்தேர்வுகள், ராணுவம், கப்பல்படை, விமானப்படை, கடல் பாதுகாப்பு படை பணிகள் உள்பட அரசு போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கான வழிகாட்டுதல் (ஓரியண்டேசன்) சிறப்பு கருத்தரங்கம், வெங்கடேசபுரத்தில்நடந்தது. தமிழ்நாடு அரசின் முன்னாள் முதன்மை செயலாளர் அபுல்ஹாசன், ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவதற்கான பணி அனுபவங்கள் குறித்து சிறப்புரையாற்றினார். ஓய்வு பெற்ற விமானப்படை அலுவலர் ஹரிசுதன், பணி நாடுபவர்களுக்கான வாய்ப்புகள் குறித்தும், முதுநிலை பயிற்சியாளர் டாக்டர் சரவணன், பணி நாடுபவர்களுக்கான பாட பயிற்று முறைகள் மற்றும் அதற்கான பயிற்சி பிரிவுகள் குறித்தும், முதுநிலை பயிற்சியாளர் கே.எஸ்.ரெங்கராஜன் பயிற்சியில் சேருவதற்கான வழிமுறைகள், எதிர்கொள்ள இருக்கும் தேர்வுகள் குறித்தும் விளக்கி பேசினார்கள். இதில் போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள இளைஞர்கள், இளம்பெண்கள் மற்றும் தேர்விற்கு விண்ணப்பிக்க காத்திருப்பவர்கள், தேர்வுகளை எதிர்நோக்க தயாராக உள்ளவர்கள் என திரளானவர்கள் கலந்து கொண்டனர்.Guidance Seminar for Civil Services Candidates


Related Tags :
Next Story