சென்னை விமான நிலையத்தில் குஜராத் தொழில் அதிபரின் மனைவி திடீர் சாவு


சென்னை விமான நிலையத்தில் குஜராத் தொழில் அதிபரின் மனைவி திடீர் சாவு
x

சென்னை விமான நிலையத்தில் குஜராத் தொழில் அதிபரின் மனைவி மாரடைப்பால் உயிரிழந்தார்.

சென்னை

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு கிரி (வயது 45). தொழில் அதிபர். இவருடைய மனைவி கமலா பீன் (40). இருவரும் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து விமானத்தில் சென்னைக்கு வந்தனர். பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆமதாபாத் செல்ல காத்திருந்தனர்.

அப்போது கமலா பீனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக விமான ஊழியா்கள் வீல் சேரில் கமலா பீனை ஏற்றி விமான நிலைய ஆஸ்பத்திரிக்கு அவசரமாக கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கமலா பீன் கடுமையான மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சென்னை விமான நிலைய போலீசார், உயிரிழந்த பெண் பயணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story