குண்டாறு அணை நிரம்பியது


குண்டாறு அணை நிரம்பியது
x

குண்டாறு அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே கண்ணுப்புளிமெட்டு பகுதியில் குண்டாறு அணை உள்ளது. 36.10 அடி முழு கொள்ளளவு கொண்ட இந்த அணையின் மூலம் நேரடியாக 731 ஏக்கரும், மறைமுகமாக 392 ஏக்கரும் என மொத்தம் 1,123 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக குண்டாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் நேற்று அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது.

குண்டாறு அணை நிரம்பி தண்ணீர் வழிந்தோடுவதால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அவர்கள் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர்.

1 More update

Next Story