மேலும் ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வளரும் தமிழர் கட்சி பிரமுகர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
வளரும் தமிழர் கட்சி பிரமுகர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கொலை
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 34). வளரும் தமிழகம் கட்சி பிரமுகரான இவரை கடந்த மார்ச் மாதம் திருவாரூரை அடுத்த காமலாபுரம் பகுதியில் 8 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்தது.
இந்த கொலை வழக்கில் பலரை ஏற்கனவே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய திருக்கண்ணமங்கை பகுதியை சேர்ந்த இளையராஜா கடந்த 2 மாதங்களாக தலைமறைவாக இருந்தார். அவரை திருவாரூர் மாவட்ட தனிப்படை போலீசார் கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு சென்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குண்டர் சட்டம்
பூவனூர் ராஜ்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேர் ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இளையராஜா மீது குண்டர் சட்டத்தின் கீழ் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் பரிந்துரையின் பேரில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டார்.
அதன்படி இளையராஜாவை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.