கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

நகைக்காக பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்து உள்ளது

திருவாரூர்

வடுவூர், ஜூன்.8-

வடுவூர் அருகே உள்ள மேலநெம்மேலி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (வயது55). இவரை மகாதேவபட்டினம் கீழபேட்டை அண்ணாபுரத்தை சேர்ந்த மாணிக்கம் (39) மற்றும் மேலநெம்மேலி கீழதெருவை சேர்ந்த தனியரசு (45) ஆகிய இருவரும் சேர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் கொலை செய்தனர். மேலும் அவர் அணிந்திருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான சங்கிலியையும் பறித்துக்கொண்டு உடலை சாக்கில் சுற்றி இருசக்கர வாகனத்தில் ஏற்றி மகாதேவபட்டினம் அருகில் உள்ள வாய்க்காலில் வீசி சென்றனர். இந்த வழக்கில் மாணிக்கம், தனியரசு மற்றும் ஒருவர் உள்ளிட்ட 3 போ் கைது செய்யப்பட்டு நாகப்பட்டினம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கொலை வழக்கில் கைதான மாணிக்கம், தனியரசு ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு பரிந்துரை செய்திருந்தார். இதன் அடிப்படையில் திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கைதான மாணிக்கம், தனியரசு இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன்போில் வடுவூர் போலீசார் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story