உரிமம் பெறாத 55 துப்பாக்கிகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிமம் பெறாத 55 துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிமம் பெறாத 55 துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
எச்சரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் உரிமம் பெறாமல் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தாமாக முன் வந்து போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும். போலீசாரின் சோதனையில் துப்பாக்கி வைத்து இருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
இதையடுத்து மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதி போலீசார் தீவிர ரோந்து சென்று துப்பாக்கிகள் யாரும் வைத்துள்ளார்களா? என்று கண்காணித்து வருகின்றனர். அனுமதி பெறாமல் துப்பாக்கி வைத்துள்ளவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். மேலும் துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
துப்பாக்கிகள் பறிமுதல்
இதனிடையே சூளகிரி கோபசந்திரம், உலகம் கூட்டு ரோடு, பெரியக்குத்தி, இருதுகோட்டை, அஞ்செட்டி, ஜவளகிரி மற்றும் வனப்பகுதிகளில் உரிமம் பெறாமல் துப்பாக்கி வைத்திருந்தவர்கள் வனப்பகுதி மற்றும் கோவில்களில் வைத்து சென்றனர். அவ்வாறு வைத்திருந்த மொத்தம் 55 நாட்டுத்துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.






