ஊட்டியில் மாணவ-மாணவிகளுக்கு துப்பாக்கிகளை கையாளும் பயிற்சி


ஊட்டியில் மாணவ-மாணவிகளுக்கு துப்பாக்கிகளை கையாளும் பயிற்சி
x
தினத்தந்தி 3 Feb 2023 6:45 PM GMT (Updated: 3 Feb 2023 6:46 PM GMT)

ஊட்டியில் மாணவ-மாணவிகளுக்கு துப்பாக்கிகளை கையாளும் பயிற்சி

நீலகிரி

ஊட்டி

இந்திய அளவில் ஆண்டுதோறும் தேசிய மாணவர் படை (என்.சி.சி.,) மாணவர்களுக்கான 'ஏ' சான்றிதழ் தேர்வு பிப்ரவரி மாதத்தில் நடத்தப்படும். நீலகிரி மாவட்ட 31-வது தமிழ்நாடு அணி என்.சி.சி., அமைப்பின் கட்டுபாட்டில் உள்ள ஊட்டி சி.எஸ்.ஐ., சி.எம்.எம் பள்ளி, ஜோசப் பள்ளி, நஞ்சநாடு, எடக்காடு, சாம்ராஜ், மஞ்சூர், முத்தோரை பாலாடா ஏகலைவா பள்ளிகளை சேர்ந்த என்.சி.சி., மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் 'ஏ' எழுத்து தேர்வு ஊட்டியில் நடந்தது.

நீலகிரி மாவட்ட தனி அணி என்.சி.சி., அணியின் கமாண்டர் லெப்டினெட் சீனிவாஸ் தலைமை தாங்கி எழுத்து தேர்வினை தொடங்கி வைத்தார். இதில் 375 மதிப்பெண்களுக்கு எழுத்து தேர்வு, 125 மதிப்பெண்களுக்கு துப்பாக்கி கையாளுதல் தேர்வு, உடல் தகுதி தேர்வு என மொத்தம் 500 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது. இதில் 200 மதிப்பெண்களுக்கு மேல் எடுப்பவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். துப்பாக்கி கையாளுதல் தேர்வை ராணுவ அதிகாரிகள் மேற்பார்வை செய்தனர். இதில் 300-க்கும் மேற்பட்ட என்.சி.சி., மாணவ, மாணவிகள், என்.சி.சி., அலுவலர்கள் சுப்பிரமணியன், காமராஜ், யூபா்ட், ஜாய், ஜிஜோ ஜோசப், சீனிவாசன், ரேவதி, பசுவதேவன் மற்றும் அவில்தார்கள் வருண்குமார், ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் குன்னூர், கூடலூர் மையங்களிலும் 'ஏ' சான்றிதழுக்கான தேர்வு நடந்தது. இதிலும் திரளான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story