பணியின்போது உயிர்நீத்த போலீசாருக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை


தினத்தந்தி 21 Oct 2023 6:45 PM GMT (Updated: 21 Oct 2023 6:46 PM GMT)

ஆய்க்குடியில் உள்ள காவலர் நீத்தார் நினைவிடத்தில், பணியின்போது உயிர்நீத்த போலீசாருக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

தென்காசி

இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ந்தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் ஆய்க்குடி போலீஸ் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள காவலர் நீத்தார் நினைவிடத்தில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு பணியின்போது உயிர்நீத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் கூடுதல் சூப்பிரண்டுகள், துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் மலர் வளையம் வைத்து, 60 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர். பணியின்போது உயிரிழந்த சேர்ந்தமரம் போலீஸ் ஏட்டு சுந்தரையா உள்பட மத்திய பாதுகாப்பு படை, மாநில காவல் துறையில் பணியாற்றிய 188 காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.


Next Story