திருவாவடுதுறை ஆதீனத்தில் குருபூஜை விழா
திருவாவடுதுறை ஆதீனத்தில் குருபூஜை விழா நடந்தது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறை திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்தில் உள்ள மறைஞான தேசிகர் தபோவனத்தில் 23-வது குருமா சன்னிதானம் சிவப்பிரகாச தேசிக மூர்த்திகளின் 10-ம் ஆண்டு குருபூஜை விழா நேற்று நடந்தது. இதையொட்டி திருவாசக சொற்பொழிவு நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருவாசகம் மற்றும் பசுபதீஸ்வரர் எனும் தலைப்பிலான நூலை திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வெளியிட்டார். அதனை தோல் நோய் சிகிச்சை மருத்துவர் நவீன், கண் அறுவை சிகிச்சை மருத்துவர் வந்தனா மற்றும் கோவில் கண்காணிப்பாளர் சண்முகம் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story