அழுக்கு சாமியார் கோவிலில் குரு பூஜை விழா


அழுக்கு சாமியார் கோவிலில் குரு பூஜை விழா
x
தினத்தந்தி 10 Dec 2022 12:15 AM IST (Updated: 10 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

அழுக்கு சாமியார் கோவிலில் குரு பூஜை விழா

கோயம்புத்தூர்

ஆனைமலை

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள வேட்டைக்காரன் புதூர் பகுதியில் அழுக்கு சாமியார் கோவில் உள்ளது. இக்கோவிலில் 103-ம் ஆண்டு குரு பூஜை விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு கொடி கம்பம் நடுதல், 6.30 மணிக்கு கைலாய வாத்தியம், 7 மணிக்கு கஞ்சி மற்றும் அன்னதானம் வழங்குதல், 7.20 மணிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். மேலும் பக்தர்களுடன் அமர்ந்து அன்னதானம் சாப்பிட்டார்.

இதையடுத்து மாலை 5.10 மணிக்கு முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதையொட்டி ஆனைமலை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story