அனைத்து அரசு துறைகளின் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
அனைத்து அரசு துறைகளின் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அனைத்து அரசு துறைகளின் திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் முன்னிலையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை பணிகள், சாலை பணிகள், திடக்கழிவு மேலாண்மை பணிகள், நமக்கு நாமே திட்டம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும், அதன் செயலாக்கப் பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மக்களுக்கான திட்டப்பணிகள் அனைத்தையும் தொய்வின்றி சிறந்த முறையில் மேற்கொள்ளுமாறு அரசுத்துறை உயர் அலுவலர்களுக்கு அமைச்சர்கள் அறிவுரை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா, மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.