குருபூஜை விழா


குருபூஜை விழா
x

குருபூஜை விழா நடைபெற்றது.

சிவகங்கை

இளையான்குடி,

இளையான்குடி வேதாந்த மடம் மற்றும் ராமேசுவரம் சிவாஸ்ரமம் ஆகியவற்றின் ஸ்தாபகரும், குரு முதல்வருமாகிய ஸ்ரீலஸ்ரீசிவானந்த ஞான தேசிய சுவாமிகளின் 49-வது ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. இதையொட்டி சுவாமிகளின் ஜீவ சமாதியில் அமைந்துள்ள லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு யாகங்கள் நடந்தது. இளையான்குடி வேதாந்த மடாதிபதி சிவாகுப்புசாமி சுவாமிகள் தலைமையிலும், ராமேசுவரம் சிவாசிவானந்த சுவாமிகள் முன்னிலையிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திருமழபாடி சிவானந்தா சுவாமிகள், அரியாண்டிபுரம் மடாதிபதி மாதவகுமாரசுவாமிகள், பார்த்திபனூர் மடாதிபதி செல்வராஜ் மற்றும் சாதுக்களும், சிவனடியார்களும், பக்தர்களும் கலந்து கொண்டனர்.


1 More update

Next Story