மருதுபாண்டியர் 221-வது குருபூஜை விழா


மருதுபாண்டியர் 221-வது குருபூஜை விழா
x
தினத்தந்தி 28 Oct 2022 12:15 AM IST (Updated: 28 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மருதுபாண்டியர் 221-வது குருபூஜை விழாவில் பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

சிவகங்கை

காளையார்கோவில்,

மருதுபாண்டியர் 221-வது குருபூஜை விழாவில் பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

குருபூஜை விழா

காளையார்கோவிலில் மருது பாண்டியர்களின் 221-வது குருபூஜை விழா நேற்று காளையார்கோவில் காளீஸ்வரர் கோவில் எதிரில் உள்ள நினைவிடத்தில் கோவை ஆதீனத்தின் 51-வது சக்தி பீடம் பராசக்தி தம்பிரான் தலைமையில் யாக பூஜையுடன் தொடங்கியது. சமுதாய மக்களால் நடத்தப்படும் குருபூஜை விழாவில் உள்ளூர் மக்கள் 458 பேர் முளைப்பாரி மற்றும் பால்குடம் சுமந்தும், அலகு குத்தியும் ரதவீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து மருது பாண்டியர்கள் சிலைக்கு அபிஷேகம் செய்தனர்.

தொடர்ந்து தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கியசாமி, யோக கிருஷ்ணகுமார், கென்னடி, சிவகங்கை நகராட்சி சேர்மன் ஆனந்த், முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், முன்னாள் எம்.பி.பவானி ராஜேந்திரன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி

காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சார்லஸ், பழனியப்பன், சோனை, வட்டார தலைவர்கள் நாகராஜ், மதி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், ஒன்றிய செயலாளர்கள் சிவாஜி, பழனிச்சாமி, ஸ்டீபன் அருள்சாமி, மாநில இளைஞரணி இணை செயலாளர் கருணாகரன், கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி காளையார் கோவில் பங்குத்தந்தை சூசைய ஆரோக்கியம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் குகன் மூர்த்தி தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். மதுரை ஆதீனம் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். பா.ஜ.க. சார்பில் மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன், மாவட்ட தலைவர் சக்தி, நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

மலர் தூவி மரியாதை

மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ், மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அ.ம.மு.க. சார்பில் தேர்தல் பிரிவு செயலாளர் மகேந்திரன், அம்மா பேரவை செயலாளர் டேவிட் அண்ணாதுரை, கழக அமைப்பு செயலாளர் முனியசாமி, மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி, மாவட்ட பொருளாளர் அந்தோணி லாரன்ஸ், காளையார்கோவில் ஒன்றிய செயலாளர் சக்தி, மகேந்திரன், நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் அஞ்சலி செலுத்தினார். தமிழக தலைமை அகமுடையார் சங்க நிறுவன தலைவர் ஸ்ரீபதி செந்தில்குமார், மாநில துணை தலைவர் கமுதி நாராயணமூர்த்தி, கமுதி சத்தியேந்திரன், மதுரை முத்துக்குமார், பிச்சைக்கனி, காளையார்கோவில் ஊராட்சி மன்றத்தலைவர் ஜோஸ்பின் மேரி அருள்ராஜ், துணைத் தலைவர் சிவ சண்முகம் கவுன்சிலர் பாண்டியராஜன் மற்றும் பல்வேறு கட்சி, அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

2200 போலீசார் பாதுகாப்பு

இந்த குருபூஜை விழாவையொட்டி ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. மயில்வாகனன் உத்தரவின் பேரில் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உள்பட 3 போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 2200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

குருபூஜை விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் மருதுபாண்டியர் நல அறக்கட்டளையின் சார்பாக தலைவர் நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.


Next Story