நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா


நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா
x

நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா

திருவாரூர்

குருபகவான் மீனராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியடைந்ததை முன்னிட்டு நீடாமங்கலம் விசாலாட்சி சமேத காசிவிசுவநாதர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோவிலில் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது. குருபகவான் பெயர்ச்சி அடைந்த நேரத்தில் குருதெட்சிணாமூர்த்திக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலிலும் குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு குருதெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.


Next Story