அன்னை சித்தர் ராஜகுமார் சுவாமியின் குருபூஜை விழா


அன்னை சித்தர் ராஜகுமார் சுவாமியின் குருபூஜை விழா
x

அன்னை சித்தர் ராஜகுமார் சுவாமியின் குருபூஜை விழா நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் உள்ள காகனை ஈஸ்வரர் கோவிலில் அன்னை சித்தர் ஸ்ரீலஸ்ரீ ராஜகுமார் சுவாமி அதிஷ்டானத்தில் திருவோணம் நட்சத்திர தினமான நேற்று முன்தினம் 2-வது ஆண்டு குருபூஜை விழா, மகா சித்தர்கள் அறக்கட்டளை சார்பில் விமரிசையாக நடந்தது. நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மாத்தாஜி ரோகிணி ராஜகுமார் தலைமை தாங்கினார். தவயோகிகள் சுந்தரமாகலிங்க சுவாமி, தவசிநாதன் சுவாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சன்மார்க்க அன்பர்கள் அகவல் பாராயணமும், சிவனடியார்கள் திருமுறை பாராயணமும் செய்தனர். மேலும் மலையூர் சதாசிவம் மற்றும் திருக்கோவிலூர் ஜீவசீனிவாசன் குழுவினரின் திருவருட்பா இசைக்கச்சேரி நடைபெற்றது. மேலும் கோபூஜை, அஸ்வ பூஜை, 210 சித்தர்கள் யாக பூஜை நடைபெற்றது. பெரம்பலூரில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு உயிர் காக்கும் கருவி இணை இயக்குனரிடம் அறக்கட்டளை சார்பில் சிவகாசி தொழில் அதிபர் அதிபன் போஸ், சிங்கப்பூர் மெய்யன்பர் பாபாஜி, சிங்கப்பூர் தொழில் அதிபர் கண்ணப்ப செட்டியார் மற்றும் ஓய்வு பெற்ற இந்துசமய அறநிலைய ஆட்சித்துறை இணை ஆணையர் சிவகுமார் ஆகியோர் வழங்கினர். விழாவில் திருச்சி பெரியசாமி டவர்ஸ் பி.டி.ராஜன், டாக்டர் ராஜா சிதம்பரம், பெரம்பலூர் மாவட்ட சன்மார்க்க சங்க தலைவரும், அரசு வக்கீலுமான சுந்தர்ராஜன், அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத் துணைத் தலைவர் சுவாமி ராமானந்தா, சிவசேனா கட்சி மாநில செயல் தலைவர் சசிகுமார், திரைப்பட இயக்குனர் திருமலை, இணை இயக்குனர் ஜெயதீபன் மற்றும் சன்னியாசிகள் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். குரு பூஜை ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ராதா மாதாஜி, சன்மார்க்க மெய்யன்பர் கிஷோர் குமார் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.


Next Story