63 நாயன்மார்களுக்கு குருபூஜை


63 நாயன்மார்களுக்கு குருபூஜை
x

திருத்தளிநாதர் கோவிலில் 63 நாயன்மார்களுக்கு குருபூஜை நடைபெற்றது.

சிவகங்கை

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவிலில் நேற்று 63 நாயன்மார்களுக்கு குருபூஜை விழா நடைபெற்றது. இதையொட்டி திருத்தளிநாதர் ஆடல் வல்லான் மண்டபத்தில் 63 கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் கலச பூஜை எதிரே அப்பர், சுந்தரர், சம்மந்தர், மாணிக்கவாசகர் ஆகியோரின் உற்சவ சிலைகளுக்கு பால், தயிர், திருமஞ்சனம், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 8 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

63 நாயன்மார்களும் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளப்பட்டு கோவில் உட்பிரகாரம் வலம் வந்தனர். விழாவிற்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமை தாங்கினார். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.

1 More update

Related Tags :
Next Story