குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கம்


குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கம்
x

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது

மதுரை


தென்னக ரெயில்வேக்கு உட்பட்ட திருவனந்தபுரம் கோட்டத்தில், பல்வேறு என்ஜினீயரிங் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக கோட்டத்திற்குள் உள்ள ரெயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குருவாயூரில் இருந்து மதுரை வழியாக சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16128) நாளை (வெள்ளிக்கிழமை), 7-ந் தேதி, 9-ந் தேதி, 10,12,14,16,17,19,21-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை, 26, 28-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை உள்ள நாட்களில் எர்ணாகுளம், ஆழப்புழை வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக கோட்டயம் வழியாக இயக்கப்படும்.

மறுமார்க்கத்தில், சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16127) நாளை, 7,9,10,12,14,16,17,19-ந் தேதிகளிலும், 21-ந் தேதி முதல் 24-ந் தேதி வரையும், 26,28-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையிலும் உள்ள நாட்களில் எர்ணாகுளம், ஆழப்புழை வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக கோட்டயம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். மேலும், பயணிகளின் வசதிக்காக இந்த ரெயில்கள் கோட்டயம் ரெயில் நிலையத்தில் நின்று செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Next Story