சிக்னல் கோளாறால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ெரயில் நடுவழியில் நிறுத்தம்


சிக்னல் கோளாறால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ெரயில் நடுவழியில் நிறுத்தம்
x

திருமங்கலம் அருகே சிக்னல் கோளாறால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ெரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

மதுரை

திருமங்கலம், ஜன.20-

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ெரயில், சென்னையில் இருந்து குருவாயூருக்கு மதுரை, திருமங்கலம் வழியாக செல்கிறது. நேற்று மாலை 4.40 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு திருமங்கலம் நோக்கி குருவாயூர் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது. மறவன்குளம் அருகே வந்தபோது ரெயில் தொடர்ந்து செல்வதற்கான சிக்னல் சரியாக கிடைக்கவில்லை. இதன் காரணமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

ெரயில் நடுவழியில் நின்றதால் இந்த ெரயில் கிராசிங்கிற்காக காத்திருந்த நெல்லை-தாதர் எக்ஸ்பிரஸ் ெரயில் திருமங்கலம் ெரயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் திருமங்கலம் ெரயில்வே நிலைய ஊழியர்கள் விரைந்து சென்று சிக்னல் கோளாறை சரி செய்தனர். இதனால் 40 நிமிட தாமதத்திற்கு பிறகு குருவாயூர் எக்ஸ்பிரஸ் ெரயில் புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

சிக்னல் கோளாறு காரணமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் மாலை 5.30 மணிக்கு வரவேண்டிய மதுரை-செங்கோட்டை பயணிகள் ெரயிலும் திருப்பரங்குன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு அரை மணி நேரம் தாமதத்திற்கு பின்பு திருமங்கலம் வந்து அடைந்தது.

குருவாயூர் ெரயில் நடுவழியில் நின்றதால் மறவன்குளம் ெரயில்வே கேட் திறக்கப்படவில்லை. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் திருமங்கலம் -விமான நிலைய சாலையில் ெரயில்வே கேட் மூடப்பட்டதால் அங்கும் வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story