குட்கா பதுக்கி விற்ற 2 கடைகளுக்கு சீல்


குட்கா பதுக்கி விற்ற 2 கடைகளுக்கு சீல்
x

நல்லம்பள்ளி அருகே குட்கா பதுக்கி விற்ற 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே நார்த்தம்பட்டி கிராமத்தில் மளிகை கடையில் குட்கா பதுக்கி விற்பதாக உணவு பாதுகாப்பு துறை அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நல்லம்பள்ளி ஒன்றிய உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கந்தசாமி தலைமையில் அலுவலர்கள் விரைந்து சென்று மளிகை கடையில் சோதனை செய்தனர். அப்போது மணிவேல் என்பவருடைய கடையில் குட்கா பொருட்கள் பதுக்கி விற்றது தெரியவந்தது. இதையடுத்து அலுவலர்கள் அந்த கடைக்கு சீல் வைத்தனர். மேலும் கடைக்காரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதேபோல் வெள்ளக்கல் அருகே ரமேஷ் என்பவர் மளிகை கடையில் குட்கா பதுக்கி விற்றது தெரியவந்தது. இதையடுத்து அலுவலர்கள் அந்த கடைக்கும் சீல் வைத்தனர். இதுதொடர்பாக தொப்பூர் போலீசார் மளிகை கடை உரிமையாளர் ரமேசை கைது செய்தனர். இந்த 2 கடையில் இருந்தும் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story