வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் குட்கா பறிமுதல்


வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் குட்கா பறிமுதல்
x

வளநாட்டில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

துவரங்குறிச்சி, செப்.11-

வளநாட்டில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

குட்கா பறிமுதல்

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த வளநாடு கூட்டுறவு சங்கம் அருகே உள்ள ஒரு வீட்டில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வளநாடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று காலையில் மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் தலைமையில் வளநாடு போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டுக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு மூட்டை, மூட்டையாக குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து போலீசார் 69 மூட்டைகளில் இருந்த குட்காவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் பாலமுருகன் (வயது 29) என்பவர் விற்பனைக்காக குட்காவை பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. .

கைது

இதையடுத்து போலீசார் பாலமுருகனை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ.3 லட்சத்து 65 ஆயிரம் ஆகும். இந்த குட்கா பொருட்கள் எங்கிருந்து வாங்கப்பட்டது. எங்கெல்லாம் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்பது குறித்து வளநாடு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு வெளிமார்க்கெட்டில் ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.


Next Story