ரூ.10 லட்சம் குட்கா காருடன் பறிமுதல்


ரூ.10 லட்சம் குட்கா காருடன் பறிமுதல்
x
சேலம்

கருப்பூர்:-

பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக திருப்பூருக்கு காரில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் குட்காவை போலீசார் மடக்கி பிடித்தனர். கார் மற்றும் குட்காவை பறிமுதல் செய்த போலீசார், டிரைவரை கைது செய்தனர்.

குட்கா கடத்தல்

சேலம் கருப்பூர் அருகே உள்ள சுங்கச்சாவடியில் பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக திருப்பூருக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக சேலம் மாநகர போலீஸ் உதவி கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு படை அமைத்து போலீசார் நேற்று மதியம் கருப்பூர் சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் 25 மூட்டை குட்கா பொருட்கள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். உடனே அந்த குட்காவுடன் அந்த கார் மற்றும் டிரைவரை கருப்பூர் போலீஸ் நிலையத்தில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர்.

காருடன் பறிமுதல்

இதையடுத்து கருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோன்மணி வழக்குப்பதிவு செய்து பிடிபட்ட டிரைவரிடம் விசாாரணை நடத்தினார். இதில் அவர், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, சின்னாட்டி, ஜக்கேரி பகுதியை சேர்ந்த அம்ரீஷ் (வயது 30) என்பதும், அவர் பெங்களூருவில் இருந்து 25 மூட்டைகளில் 242 கிலோ எடையுடன் கூடிய ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை திருப்பூருக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், கடத்தி வரப்பட்ட குட்கா பொருட்களையும், காரையும் பறிமுதல் செய்தனர்.


Next Story