குட்கா விற்றவர் கைது


குட்கா விற்றவர் கைது
x

ஆம்பூர் அருகே குட்கா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

திரும்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணா உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் ஆம்பூர் பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கென்னடிகுப்பம் ரெயில் ரோட்டில் அதே பகுதியை சேர்ந்த கருணாகரன் (வயது 40) என்பவரது கடையில் சோதனை நடத்தினர். இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்கள் விற்றது தெரிய வந்தது. அங்கிருந்து 65 குட்கா பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து கருணாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story