பெங்களுரூவில் இருந்து திண்டிவனத்துக்கு காரில் 40 மூட்டைகளில் குட்கா கடத்தல் 3 வாலிபர்கள் கைது


பெங்களுரூவில் இருந்து திண்டிவனத்துக்கு    காரில் 40 மூட்டைகளில் குட்கா கடத்தல்    3 வாலிபர்கள் கைது
x

பெங்களுரூவில் இருந்து திண்டிவனத்துக்கு காரில் 40 மூட்டைகளில் கடத்தி வரப்பட்ட குட்காவை போலீசார் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தார்கள்.

விழுப்புரம்


திண்டிவனம்,

திண்டிவனம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் போன்ற பொருட்கள் கடத்தப்படுவதாக ரோசனை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் பிருந்தா தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் நேற்று காலை திண்டிவனம் சந்தைமேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திண்டிவனம் நோக்கி வந்த ஒரு காரை மடக்கி சோதனையிட்டனர். அதில், காரில் 40 மூட்டைகளில் மொத்தம் 298 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது. இதையடுத்து கரில் வந்த 3 பேரை பிடித்து, விசாரித்தனர்.

3 பேர் கைது

அதில், அவர்கள் பெங்களுரூ ஒயிட் பீல்டு பகுதியைச் சேர்ந்த கிஷோர் (வயது 28), சென்னை சவுகார்பேட்டை கைலாஷ் (19), செஞ்சி காந்தி பஜார் சிங்கன ராம் (23) ஆகியோர் என்பதும், பெங்களுரூவில் இருந்து திண்டிவனம் பகுதிக்கு குட்காவை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான குட்கா, கார், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் பறிமுதல் செய்த குட்காவை திண்டிவனம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷே குப்தா நேரில் சென்று பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டார்.


Next Story