கண்மாய்கள், நீர்வரத்து ஓடைகளை தூர்வார வேண்டும்


கண்மாய்கள், நீர்வரத்து ஓடைகளை தூர்வார வேண்டும்
x

அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள கண்மாய்கள், நீர்வரத்து ஓடைகளை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள கண்மாய்கள், நீர்வரத்து ஓடைகளை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வரத்துக்கால்வாய்

அருப்புக்கோட்டையில் கண்மாய்கள், மழைநீர் வரத்துக் கால்வாய்கள் அனைத்தும் குப்பைகளாலும், கருவேல மரங்களாலும், கழிவுகளாலும் அடைபட்டு காணப்படுகிறது. இதனால் பாளையம்பட்டி கண்மாய், பெரியகண்மாய், தெப்பங்கள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு காணப்படுகிறது.

பெரும்பாலான வரத்துக் கால்வாய்கள் அடைபட்டு கிடப்பதால் மழைநீர் செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகிறது. வீணாக சாலையில் செல்லும் மழை நீர் சாக்கடை நீருடன் கலந்து ஆங்காங்கே தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

தூா்வார வேண்டும்

மேலும் கண்மாய்களிலும் கருவேல மரங்கள் சூழ்ந்து காணப்படுகிறது. அருப்புக்கோட்டை மற்றும் பாளையம்பட்டியில் உள்ள கண்மாய்கள் தூர்வாரப்படவில்லை.

இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விரைவில் மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் கண்மாய்களில் உள்ள கருவேல மரங்களை அகற்றி தூர்வார வேண்டும். அத்துடன் கால்வாய்களை தூய்மைப்படுத்தி தூர்வாரினால் மட்டுமே மழைநீர் வீணாகாமல் நீர் நிலைகளுக்கு சென்று நிலத்தடி நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் கூறுகின்றனர். ஆதலால் வரத்துக்கால்வாய் பகுதிகளையும், கண்மாய்களையும் உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story