நள்ளிரவில் ஆலங்கட்டி மழை


நள்ளிரவில் ஆலங்கட்டி மழை
x

கே.வி.குப்பம் பகுதிகளில் நள்ளிரவில் ஆலங்கட்டி மழை பெய்தது.

வேலூர்

கே.வி.குப்பம்

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று நள்ளிரவில் திடீரென சூறாவளி காற்று மற்றும் இடி-மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

இந்த மழை சுமார் 3 மணி நேரம் நீடித்தது. சாலைகளிலும், வீடுகளிலும் குவியல் குவியலாக ஆலங்கட்டி விழுந்தது.

இந்த மழையினால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் சில இடங்களில் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.


Related Tags :
Next Story