தரகம்பட்டி பகுதியில் ஆலங்கட்டி மழை
தரகம்பட்டி பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது.
தரகம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று காலையும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் நேற்று இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் வீடுகளின் மேற்கூரைகளில் கற்கள் விழுவதுபோல் சத்தம் கேட்டது. இந்த மழையால் சாலைகளில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நின்றன. மேலும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மழையில் நனைந்து கொண்டே சென்றனர். இந்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவிதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:- அரவக்குறிச்சி-38, தோகைமலை-5, கடவூர்-40, பாலவிடுதி-43.1, மைலம்பட்டி-6. மொத்தம்-132.10 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.