10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!


10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!
x

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான நுழைவுச் சீட்டு (ஹால் டிக்கெட்) வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 17-ம் தேதி முதல் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

மார்ச் 20 முதல் மார்ச் 24ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வு நடைபெறவுள்ளது. ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20 ஆம் தேதி வரை எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது.


Next Story