3 நாள் பள்ளிக்கு வந்தால் ஹால்டிக்கெட்..?" - அமைச்சர் அன்பில் மகேஷின் விரிவான விளக்கம்


3 நாள் பள்ளிக்கு வந்தால் ஹால்டிக்கெட்..? - அமைச்சர் அன்பில் மகேஷின் விரிவான விளக்கம்
x
தினத்தந்தி 18 March 2023 2:02 PM GMT (Updated: 2023-03-18T22:10:10+05:30)

மாணவர்கள் கட்டாயம் 75 சதவீதம் வருகைப்பதிவு வைத்திருக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

தஞ்சை,

தஞ்சையில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

ஒவ்வொரு அரங்ககாக சென்று பார்வையிட்ட அவர், அரங்கு ஒன்றில் வைக்கப்பட்டிருந்த உளுந்து பயிர்கள் நன்றாக இருக்கிறதா என சாப்பிட்டுப் பார்த்து ஆய்வு செய்தார்.

தொடர்ந்து இந்து சமய அறநிலைத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த அரங்கில் பிள்ளையாருக்கு நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிகளுக்கு ஆண்டிற்கு 3 நாட்கள் வருகை தந்தாலும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்ற செய்தி தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், மாணவர்கள் கட்டாயம் 75 சதவீதம் வருகைப்பதிவு வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.


Next Story