வைக்கோல் சுற்றும் எந்திரத்தில் கை சிக்கி வாலிபர் படுகாயம்


வைக்கோல் சுற்றும் எந்திரத்தில் கை சிக்கி வாலிபர் படுகாயம்
x

வைக்கோல் சுற்றும் எந்திரத்தில் கை சிக்கி வாலிபர் படுகாயமடைந்தார்.

திருச்சி

உப்பிலியபுரம்:

உப்பிலியபுரம் ஒன்றியம், ஆங்கியம் ஊராட்சி பகுதியில் முருகேசன் என்பவரது வயலில் நெல் அறுவடை நடைபெற்றது. அறுவடையை தொடர்ந்து வயலில் இருந்த வைக்கோல் சுற்றும் எந்திரத்தை கரிகாலியை சேர்ந்த ராஜா இயக்கினார். அவருக்கு உதவியாக கரிகாலியை சேர்ந்த அரவிந்த்(வயது 21) இருந்தார். அப்போது வைக்கோல் சுற்றும் எந்திரத்தில் சுற்றிய நூலை அரவிந்த் அகற்ற முயன்றதாக தெரிகிறது. அப்போது இயங்கிக் கொண்டிருந்த எந்திரத்தில், அரவிந்தனின் வலது கை எதிர்பாராதவிதமாக சிக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் வலியில் அலறினார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அரவிந்தனை மீட்டு, சிகிச்சைக்காக நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து உப்பிலியபுரம் ேபாலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


Next Story