கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்


கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 July 2023 9:39 PM IST (Updated: 12 July 2023 5:05 PM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளம் நால்ரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. கைத்தறி நெசவாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பூர்

போடிப்பட்டி

மடத்துக்குளம் நால்ரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. கைத்தறி நெசவாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கைத்தறி நெசவாளர் சங்க பொறுப்பாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது பார்டர் டிசைனுடன் கூடிய பருத்தி சேலை, பட்டு சேலை, கோரா பட்டு, வேட்டி, துண்டு, ஜமுக்காளம் மற்றும் சட்டை துணிகள் உள்ளிட்ட 11 ரகங்கள் கைத்தறிக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்யக் கூடாது.கொரோனா காலம் தொடங்கி, நலிவடைந்துள்ள நெசவாளர் குடும்பங்களுக்கு ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். கைத்தறி நெசவாளர் நலன் காப்பீட்டு திட்ட மருத்துவ அட்டை மீண்டும் இலவசமாக வழங்க வேண்டும்.அனைத்து கைத்தறி சங்கங்களிலும் கைத்தறிக்கான மூலப்பொருட்கள் விற்பனைக்கூடம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.


Next Story