வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கையுந்து பந்து விளையாட்டு பயிற்சி மையம்

வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கையுந்து பந்து விளையாட்டு பயிற்சி மையம்
x

வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கையுந்து பந்து விளையாட்டு பயிற்சி மையம்அமைக்கப்படுகிறது.இது தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ராணிப்பேட்டை

வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கையுந்து பந்து விளையாட்டு பயிற்சி மையம்அமைக்கப்படுகிறது.இது தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் "எஸ்.டி.ஏ.டி. விளையாட்டு இந்தியா மாவட்ட மையம்" சார்பில் வாலாஜா அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கையுந்துபந்து விளையாட்டை செயல்படுத்தப்பட உள்ளது.

இம்மையத்தில் குறைந்தது 30 முதல் 100 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தினமும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி மையத்தில் சேருவதற்கு 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ - மாணவிகளுக்கான தேர்வு போட்டிகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு வாலாஜா அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவ- மாணவிகளுக்கு சிறந்த பயிற்சியாளர் மூலம் தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 4.30 முதல் 6.30 மணி வரையிலும் பயிற்சி அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் மாணவ- மாணவிகளுக்கு விளையாட்டுச் சீருடைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படும்.

எனவே மேற்படி பயன்களை கருத்தில் கொண்டு ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிகளில் பயிலும் விருப்பமுள்ள மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Next Story